web log free
May 23, 2025

அதற்கு முயற்சி செய்கிறார் ஓவியா

திடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர்      ஆரவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். காதல் கிசுகிசு, பரபரப்பு கருத்துக்கள் என தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிற நடிகைகள்போல் ஓவியா தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் ஒதுங்கி நின்றார்.

அப்படியும் ஒன்றிரண்டு படங்கள் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. எவ்வளவுக்கெவ்வளவு பெயர் பெற்றிருந்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அடல்ட் படமான 90எம்எல் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் அவரது பெயரை டெமேஜ் ஆக்கியது. 

  களவாணி 2ம் பாகமும் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் ஓவியா எதற்கும் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. மலையாள படவுலகிலிருந்து தான் கோலிவுட்டில் நடிக்க வந்தார் ஓவியா.

கடைசியாக 2011ம் ஆண்டு புதுமுகங்கள் படத்தில் நடித்த ஓவியா அதன் பிறகு தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தற்போது கொலிவுட்டிலும் அவருக்கு மார்க்கெட் டல்லடிக்கும் நிலையில் புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.  

‘நீங்க அழகா இருக்கீங்க சினிமாவுலே நடிக்கலாம்’னு ஓவியாவுக்கு ஐடியா கொடுத்தவர் இயக்குனர் பாபுராஜ். அவர் இயக்கும் பிளாக் காபி மலையாள புதுபடத்தில் தான் நடிக்க உள்ளார்,12 வருடத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சியான செயற்கை நடிப்பு கைகொடுக்காத நிலையில் மீண்டும் அசலான இயற்கை நடிப்பை வெளியிட்டு மனங்களை கவர துடிக்கும் ஓவியாவின் புதுமுயற்சி கைகொடுக்குமா????

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd