அக்டோபர் 30 ஆம் திகதி இடம்பெற்ற கடை திறப்பு விழாவுக்கு தாமதாக வந்த நடிகை நூரின் ஷெரீப்பின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் நூரின் ஷெரீப். மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் நூரினை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அழைத்தனர்.
நூரின் வருவது குறித்து அறிந்த மக்கள் சூப்பர் மார்க்கெட் முன்பு கூடினார்கள். மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார்.
அவரை காண கால் வலிக்க காத்திருந்த கூட்டம் கோபம் அடைந்தது. நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர்.
காரில் இருந்து இறங்கிய நூரின் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அதில் யாரோ தாக்கியதில் நூரினின் மூக்கு உடைந்தது. மூக்கை கையால் மறைத்தபடியே மேடைக்கு வந்த நூரின் அழுது கொண்டே பேசினார்.