நியூசிலந்தில், தேசியச் சேவைப் பயிற்சியின்போது கடுமையாகக் காயமடைந்த நடிகர் அலோய்ஷியஸ் பாங் (Aloysius Pang) காலமானார்.
பீரங்கியைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது அவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்படும் எனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆரம்பகட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், இன்று நடைபெறவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று அந்த அமைச்சு கூறியது.
நியூசிலந்தின் ஹெமில்ட்டன் (Hamilton) நகரில் உள்ள வய்காட்டோ (Waikato) மருத்துவமனையில், 28 வயது பாங், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார்.
அவரின் நல்லுடலைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் ஆயுதப் படை செய்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.