web log free
April 03, 2025

பாடகி கனிகா கபூருக்கு கொரோனா

பாலிவுட் பாடகி கனிகா கபூரின் 5வது சாம்பிள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதுவும் கரோனா தொற்று பாசிட்டிவ் என்ற முடிவையே அளித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் சாம்பிள்கள் சோதனை செய்யப்படும். கனிகா தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் கனிகா கபூர் உடல் நிலை சமநிலையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஆர்.கே.திமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 5வது முறையாக இவருக்கு கரோனா பாசிட்டிவ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இவர் மருத்துவமனையில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அங்கு வசதிகள் சரியில்லை, கொசுக்கள் இருக்கின்றன என்று புகார் எழுப்ப அதற்கு மருத்துவர்கள் நீங்கள் முதலில் நோயாளி போல் நடந்து கொள்ளுங்கள், பெரிய பிரபலஸ்தர் என்ற ஹோதாவெல்லாம் வேண்டாம் என்று எரிச்சலைக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 31 March 2020 06:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd