web log free
April 03, 2025

எனக்கு பாலியல் மிரட்டல்

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான மீரா சோப்ரா, தொடர்ந்து ‘லீ, மருதமலை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ரசிகர்களால் நிலா என அன்போடு அழைக்கப்பட்ட இவர், கடைசியாக ‘கில்லாடி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கலந்துரையாடினார். அப்போது, “தெலுங்கில் ஜூனியர் என்டிஆரைவிட மகேஷ் பாபு மிகவும் பிடிக்கும் என்று தான் கருத்து தெரிவித்ததால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் தவறான பதிவுகள் செய்ய ஆரம்பித்தனர்” என்றார்.

அத்துடன், அதில் பாலியல் மிரட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து ஜூனியர் என்டிஆரை டேக் செய்து கருத்து தெரிவித்த மீரா சோப்ரா, “இதுபோன்ற ரசிகர்களை பெற்றிருப்பது வெற்றி என்று நினைக்கிறீர்களா? எனது இந்த பதிவுக்கு பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷொட்டாக எடுத்து அதை ஹைதராபாத் பொலிஸாருக்கு டெக் செய்து நடவடிக்கைக்காக காத்திருக்கிறார் மீரா சோப்ரா.

Last modified on Wednesday, 10 June 2020 14:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd