web log free
April 03, 2025

அனுபவம் கசப்பானது

நடிகை வித்யா பிரதீப் தனக்கு நேர்ந்த சில கொடுமைகளை பற்றி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த வித்யா பிரதீப், ‘அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி’ திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சைவம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ‘அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம்’ திரைப்படங்களில் நடித்தார்.

கடைசியாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் நாயகி தொடரில் நடித்து வருகிறார்.

இன்ஸ்ட்ராகிராமில் வித்யா வெளியிட்டுள்ள  பதிவில், ‘தடம்’ திரைப்படத்துக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. நான் ஒப்பந்தமாகி இருந்த 6 திரைப்படங்களில் இருந்து என்னை நீக்கி விட்டு வேறொருவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

சம்பந்தம் இல்லாத காரணங்களுக்காக ஒன்றன்பின் ஒன்றாக இது நடந்தது. என் இதயம் உடைந்துவிட்டது. எனக்கு சினிமா ஒத்துவராது என முடிவு எடுத்து நான் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அதன் பிறகு தடம் திரைப்பட வாய்ப்பு வந்தது. கடந்தகால கசப்பான அனுபவங்களால் நடிக்க தயங்கினேன். இயக்குநர் மகிழ்திருமேனி பற்றி நண்பர்கள் எடுத்துச் சொன்னதால் பயத்துடன் தான் அந்த திரைப்படத்தில் நடிக்க சென்றேன். என்னிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக் கொண்டுவர அவரால் முடிந்தது” என்றார்.

Last modified on Wednesday, 24 June 2020 04:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd