web log free
April 03, 2025

ஆடைகளைக் களைந்து பெண்ணுடன் நித்தியாமேனன் அட்டகாசம்

நடிகை நித்யா மேனன் நடித்துள்ள 'பிரீத் - இன் டு த ஷேடோஸ்' என்ற ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. 

அதன் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் மற்றொரு நடிகையான ஸ்ருதி பாப்னா என்பவருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஒரு காருக்குள் இருவரும் இப்படி முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி சுமார் 40 விநாடிகள் வரை உள்ளது. 

அதற்கடுத்து சில வினாடிகள் அவர்கள் இருவரும் ஆடைகளைக் களைந்து கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகளும் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தான் நடிக்கும் படங்களில் கிளாமராகக் கூட ஆடை அணிய மறுக்கும் நித்யா மேனன் இப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்திருப்பது வியப்பாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஓடிடி தளங்களில் வரும் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லாத காரணத்தால்தான் இம்மாதிரியான காட்சிகள் வருகின்றன. 

இவையே திரைப்படத்தில் வந்திருந்தால் அந்தக் காட்சிகளை தணிக்கைக் குழுவினர் வெட்டி எறிந்திருப்பார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி ஆபாசம், வன்முறை, கடவுள் சர்ச்சை ஆகியவை இருந்தால்தான் ஒரு பரபரப்பான விளம்பரம் கிடைக்கிறது என ஓடிடி நிறுவனங்களும் இப்படிப்பட்ட தொடர்களை அதிகம் வெளியிடுகின்றன என்ற கருத்தும் உள்ளது.

Last modified on Sunday, 19 July 2020 02:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd