web log free
April 02, 2025

முதல்ல உன் முதுகை பாரு..கொந்தளித்த ஷிவானி

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானான் ஆண்டி எனும் கதையை போல, சீரியல் நடிகை சித்ராவின் செயல், ஷிவானியை கோபப்படுத்தி உள்ளது.

வனிதா விஜயகுமார் vs லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், மீரா மிதுன் சர்ச்சைகள் எல்லாம் வீரியம் குறைந்த நிலையில், இப்போ சூடு பிடித்து இருக்கிறது இந்த சீரியல் நடிகைகள் சண்டை.

அதுவும் ரொம்ப கீழ்த்தரமாக இறங்கி இருவரும் கமெண்ட் செய்துள்ளது ரசிகர்களுக்கு அடுத்த என்டர்டெயின்மென்ட் ஆக மாறி உள்ளது.

5 மணி பஸ் எனும் பெயரை எடுத்த பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானியை கிண்டல் செய்யும் விதமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா, பிட்டு போட்டோ வேண்டும் என்றால், என்னுடைய இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். 2000ம் ஆண்டு பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டா பக்கத்துக்கு செல்லுங்கள் என அவர் போட்ட கமெண்ட் சர்ச்சைக்கு முதல் புள்ளியாக அமைந்தது.

2001ம் ஆண்டு பிறந்த ஷிவானிக்கு இப்போ 19 வயசு தான் ஆகுது. தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சித்ராவின் கமெண்ட்டுக்கு கீழே ரசிகர்கள் ஷிவானியைத் தானே சொல்றீங்க என ஓப்பனாக கமெண்ட் போட அந்த சேதி ஷிவானி காதுகளுக்கும் எட்டி விட்டது.

என்னை உனக்கு பிடிக்க வில்லை என்றாலும், தினமும் என்னை பார்க்கும் நீயும் என் ரசிகை தான் என்றும், ஆபாச வார்த்தையை சேர்த்து திட்டியபடி ஒரு அதிரடி பதிலடியை நடிகை ஷிவானி தனது ஸ்டோரிஸில் போட்டுள்ளார். மேலும், மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார் என்றும் போட்டு சித்ராவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Last modified on Monday, 31 August 2020 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd