web log free
December 03, 2024

பிராவுடன் நடைபயின்ற நடிகை மீது தாக்குதல்

கோமாளி பட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவை பொதுமக்கள் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் கிர்ராக் பார்ட்டி படத்தின் மூலம் தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் லைவில் நடிகை சம்யுக்தா, பகிர்ந்த செய்த விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகை சம்யுக்தா, கர்நாடகாவில் உள்ள ஒரு பார்க்கில் ஒரு பெண் மற்றும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சம்யுக்தா, ஒரு நடன கலைஞர், நடிகை என்பதால் பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு பெண் உட்பட ஒரு குழுவினர் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பொது இடத்தில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததற்காக அந்த கும்பல் சம்யுக்தாவையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். அந்த பெண் அவர்களைத் தாக்க முயன்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சம்யுக்தா கூறியுள்ளார்.

மேலும் சில கன்னட நடிகர்கள் போதை பொருள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தாங்கள் மூன்று பேரும் போதை மருந்து எடுத்துக் கொண்டதாகவும் அந்த பெண்ணும் பொது மக்களும் பொய்யான குற்றச்சாட்டை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் இந்த கதறல் வீடியோவை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிராவுடன் உடற்பயிற்சி செய்ததற்காக நடிகை ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last modified on Saturday, 05 September 2020 03:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd