web log free
March 11, 2026

14 வருடங்களுக்கு முன்பே பாடிய நாயகி

சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகி 14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா படத்தின் பாடலை பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி இந்தப் படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சூர்யா-ஜோதிகா காதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் குறிப்பாக 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய இந்த பாடலை தற்போது சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி மேடை ஒன்றில் பாடியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd