சண்டகோழி 2 படத்திற்கு பின் விஷால் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
இந்த நிலையில், அயோக்யா படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவது நடிகர் விஷாலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பின் டீசரும் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தை கூறிய தேதிக்குள் முடிக்காமல் இயக்குனர் இழுத்தடித்து வருகிறாராம். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து சுந்தர்.சி படத்துக்கு செல்ல விஷால் தயாராக இருந்தார்.
ஆனால், அயோக்யா படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவதால், சுந்தர். சி படமும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறதாம். இதனால், கடுப்பான விஷால் இயக்குனர் வெங்கட் மோகனை வெளுத்து வாங்கி விட்டார் என கூறப்படுகின்றது.