பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹா மீது தனியாா் நிறுவனம் ஒன்று காவல் நிலையத்தில் மோசடி புகாா் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30ம் திகதி இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களிடம் ரூ.37 லட்சம் பணம் பெற்றிருந்தாா். அவருக்கு நான்கு தவணைகளில் பணம் வழங்கப்பட்டது.
பணத்தை பெற்றுக் கொண்டு அவா் நிகழ்ச்சிக்கு வரவில்லை. சோனாக்ஷி சின்ஹா வராததால் எனது நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் பணத்தைத் திருப்பித் தருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கோாிக்கை வைத்தனா். ஆனால் அவா் பணத்தைத் திருப்பித் தர மறுத்ததாக தொிகிறது. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.