ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி amazon prime video மூலம் வெளியான நெற்றிக்கண் திரைபடத்தின் கதாநாயகி துர்காவாக எங்கள் மனங்கவர்ந்த Lady super star நயந்தாராவும் வில்லன் கதாபாத்திரத்தில் DR.ஜேம்ஸ் தினாவாக அஜ்மல் அமீரும் நயந்தாராவிற்கு உதவும் பீட்சா பாய் கதாபாத்திரத்தில் கௌதமாக சரண் சக்தியும் அவர்களுடன் இன்னும் சிலரும் தனது தத்துரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணன் என்ற நாய் நயந்தாராவின் செல்லபிராணியாக அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளது
இத் திரைபடமானது 2011ல் வெளியான BLIND என்ற கொரியன் திரைபடத்தின் சாயலில் எடுக்கப்பட்டிருந்தாலும் இயக்குனர் மிலன் ராவ் இன்னும் சில வேறுபாடுகள் செய்து நெகிழவைக்கும் விதத்தில் படமாக்கியுள்ளார்.
இத்திரைகதையானது நயந்தாராவின் 64வது திரைபடம் என்பது குறிப்பிடதக்கது. இப் படத்தின் 'இதுவும் கடந்து போகும்' என்ற பாடல் இப்பொழுது வலையத்தளங்களில் வைரலாகிவருகின்றதை காணலாம்.