விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்திக் சுப்புராஜ் இயக்கி வருகிரார். 7 ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் இப் படத்தை லலித்குமார் தயாரிக்கின்றார்.
இதில் புகழ் பெற்ற நடிகையான சிம்ரன் வாணிபோஜன் பாபிசிம்ஹா சனத் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஸ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படமான இப்படத்திற்கு சியான் 60 என பெயர் வைத்து பின்னர் அதனை மாற்றி மகான் எனும் பெயர் வைத்துள்ளனர். இதன் 1ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே சூப்பர் வரவேற்பை பெற்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.