web log free
December 03, 2024

இலங்கை சுயாதீன கலைஞர் யோஹானி பற்றி அறியப்படாத பக்கம்.

இலங்கையை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் பாடகி யோஹானி. அவரின் முழுப்பெயர் யோஹானி டிலோக டீ சில்வா. அவரை அனைவரும் யோஹானி எனவே அழைப்பர். இவர் ஜூலை மாதம் 30ம் திகதி 1993 ல் பிறந்தவர். இன்று 2021ல் அவரின் வயது 28 ஆகும்.

இவர் கொழும்பு நகரில் ஸ்ரீலங்காவில் பிறந்தார். இவர் தற்போழுது வசிப்பதும் கொழும்பிலே என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தொழில் என்று நோக்கும் போது இவர் பல துறைகளில் சிறப்பாக தன்னை நிரூபித்துள்ளார். அதனடிப்படையில் பாடகி, பாடலாசிரியர், ராப்பர், இசைத்தயாரிப்பாளர் மற்றும் சிறந்த பெண் தொழிலதிபர் என பல பரிமாணங்கள் எடுத்துள்ளார். இவரது தாய் நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு யூடியூபர் என்பதும் இவரிடம் இவ்வளவு திறமைகள் உள்ளது என்பதும் வெளிவந்து அவர் நாடு கடந்து புகழ் பெற காரணமாக இருந்தது "மேனிக்கே மஹே ஹிதே " எனும் பாடலின் மூலமே.

இவர் தனது ஆரம்ப கல்வியை 2009 வரை  கொழும்பு  விசாகா பாடசாலையிலும்2010 தொடக்கம் 2012 வரை  உயர் படிப்பை லண்டனிலும் படித்தார். இவர் 2015ல் General Sir John Kotelawala Defence University ல்  இரண்டாம் வகுப்பு மேல் நிலையில்  இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். (Bachelor of  science in logistics ) இவரது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா, தாய் டினிதி டீ சில்வா மற்றும் சகோதரி ஷவின்றி டீ சில்வா. இவரது விடாமுயற்சியால் இன்று நாடு தாண்டி பல இடங்களிலும் நம் நாட்டவரான யோஹானியின் பாடல் அசைக்க முடியாத தனி இடம் பிடித்துள்ளது.

Image

Last modified on Tuesday, 31 August 2021 13:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd