web log free
April 02, 2025

SPB யின் கடைசி பாடல் என நினைக்கவில்லை: அண்ணாத்த பாடல் வெளியான நிலையில் ரஜினி உருக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என சூப்பர் ஸ்டார் அவர்கள் மனமுருகி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Last modified on Tuesday, 05 October 2021 07:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd