யாழ்ப்பாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவபடுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ் இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.
குறித்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக குமரனை டி.இமான் அழைத்து பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் இலங்கை தமிழர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.