பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய், நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார்.
ஏ.எல். விஜய்க்கும் அமலாபாலுக்கும், 'தலைவா' படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தமுறையும் அவர் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை சாய் பல்லவியை திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் இயக்கத்தில் வெளியான 'கரு' படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த போது, இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டு, பின் காதலாக மாறி தற்போது அது திருமணம் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.