திமுக மாநில உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் பணியாற்றியவருமான ஆர்.என்.ஆர். மனோகர் அவர்கள் தற்போது உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.