web log free
December 03, 2024

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கிய ’திருடா திருடி’ எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய ’மகதீரா’ ’பாகுபலி’ உள்பட பல திரைப்படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிவசங்கர் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ், சிரஞ்சீவி உள்பட பல திரையுலக நடிகர்கள் உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் மருத்துவமனையில் சிவசங்கர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd