web log free
May 05, 2024

தளபதியுடன் 4வது முறையாக இணையும் தெறிக்கவிடும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் மாபெரும் கூட்டணி என்றால் அது விஜய் - அட்லீ கூட்டணியாக தான் இருக்க முடியும். இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட். மேலும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது இந்த மாபெரும் வெற்றி கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 68 திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி 66 - வம்சி, தளபதி 67 - லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.