வளர்ந்து வரும் இயக்குனரான சுகுமார் அவர்கள் ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூனை கதாநாயகனாக கொண்டு இயக்கியுள்ள ‘புஷ்பா’ படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாகவும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் "சாமி ஐயா சாமி" பாடல் மற்றும் அந்த பாடலில் ராஷ்மிகா ஆடிய நடனம் என்பன ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் சமந்தா நடனமாடியுள்ள பாடலின் தெலுங்கு பதிப்பு நேற்று (டிசம்பர் 12) வெளியானது. தற்போது இந்தப் பாடலின் தமிழ் பதிப்பும் வெளியாகியுள்ளது. "ஓ சொல்றியா" என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்தப் பாடலை எழுதியுள்ளார். இப்பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.