web log free
May 23, 2025

தற்போதைய இலங்கை அரசாங்கம் ஒரு தமிழ் கலைஞரையும் அங்கீகரித்துள்ளது.

இலங்கை தமிழ் மற்றும் சிங்கள திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவிற்கு "விஸ்வாபிமானி கலகீர்த்தி" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ் மற்றும் சிங்கள படங்களில் நடித்துள்ளார் மற்றும் அவரது சமீபத்திய படமான சுனாமிக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இலங்கை நடிகை ஆவார்.
நைஜீரியாவில் 2021 இல் நடைபெற்ற பேயல்சா சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைத் திரைப்படமான ‘சுனாமி’ இரண்டு சிறந்த விருதுகளைப் பெற்றது.

சிறந்த இயக்குனருக்கான விருதை படத்தை இயக்கிய கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க வென்றார்.

இதில் கதாநாயகியாக நடித்த நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமியின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

இலங்கை அரசினால் அண்மைக் காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மேற்படி கௌரவம், ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுவதாக தெரிவித்து துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர்.

Last modified on Tuesday, 28 December 2021 04:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd