தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.
தற்போது ஷாருக்கான் நடித்துவரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்
இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, அனைவரும் ரசிக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கதை டிஸ்கஷன்,படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி பிரியாவுடன் வெளியாடு, உள்நாடு என ஜாலியாக சுற்றி வருகிறார்.
அட்லீ தனது மனைவி பிரியாவின் சிவந்த கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.