நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானார்கள். அதன்பின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இலியானாவின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது புதிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இவ்வளவு குண்டாக ஆளே அடையாளம் தெரியாதளவிற்கு மாறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.