தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம்பிடித்தார்.
ஆண்ட்ரியா கோலிவுட்டில் முதலில் ஒரு பாடகியாக கால் பதித்து பின்னர் நடிகையாக உருவெடுத்தவர்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். பிறகு, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தரமணி’, ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
படத்தில் தனது காதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை மனதில் வைத்து படங்களுக்கு ஓகே சொல்லும் ஆண்ட்ரியா இதுவரை அப்படிபட்ட கதைகளையே தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டேன். அச்சமயத்தில்தான் ‘பிசாசு 2’ படவாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், அப்படத்தில் 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க சொன்னார் இயக்குனர்.
முதலில் அதற்கு நான் முடியாது என்று கூறிவிட்டேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தினார்கள். பிறகு கதை தரமானதாக இருந்ததால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்தேன் என்றார்.
ஏற்கெனவே, நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.