பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை,வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படமான ‘அசுரன் ’ கதையின் நாயகனாக தனுஷ் நடிக்கிறார்.
இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிமுக விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. படத்தின் தனுஷின் கதாபாத்திரத்தின் அமைப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். உடனே இணையத்தில் வைரலாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தனுஷ் நடித்த மாரி 2 வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து அசுரன் படத்திற்காக பணியாற்றுவதை திரையுலகினர் மனதார ஆதரிக்கிறார்கள்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நிச்சயமாக அசுரனில் ஆச்சரியத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.