web log free
January 28, 2025

தாழி கட்டினார் விக்னேஸ் சிவன்! வெட்கப்பட்டு கண்மூடி அழகு மழை பொழிந்த நயன்தாரா!

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ரசிகர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாயிலில் இருக்கும் பாதுகாவலர்களிடம் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன்களை ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்ததால் செல்போன்களை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக விஜபிகளுக்கு முதலைப் பண்ணை வழியாக தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை ஓரமாக உள்ளூர் வாசிகள் நடந்து சென்றதை அனுமதிக்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Last modified on Thursday, 09 June 2022 11:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd