web log free
May 23, 2025

தல, தளபதி இணைந்து நடிக்கும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே தொடர்ந்து நடந்துவரும் மோதல்கள் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். 

அது பற்றி விஜய் அஜித் என இருவருமே அட்வைஸ் கூறினாலும் மோதல்கள் குறைந்தபாடில்லை.

இயக்குனர் வெங்கட் பிரபு தான் விஜய் மற்றும் அஜித் இருவரையும் இணைக்கும் படத்தை திட்டமிட்டு வருவதாக நீண்டகாலமாக கூறி வருகிறார். 

ஆனால் அதற்கான சூழ்நிலை தற்போது வரை அமையாமல் தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் - அஜித் இணையும் படத்தின் அறிவிப்பை விரைவில் வெங்கட் பிரபு வெளியிட இருப்பதாக அவரது அப்பா கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார். 

இது பான் இந்தியா படமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd