web log free
December 04, 2024

“வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்று இலங்கை மத்திய வங்கியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நாட்டிற்கு தொழிலாளர் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்துவதற்கு இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இந்த திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பெறுமதி சேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன.

தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன், பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூக - பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் எனும் பின்னணியில் இத்திளைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 இந்த பின்னணியில், இலங்கை மத்திய வங்கி (CBSL) நாட்டிற்கு தொழிலாளர்களின் பணம் வரவழைப்பதை எளிதாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் 03.11.2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் "வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்" (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.
 
FRFD இன் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:
 
வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் வசதி திணைக்களம், இல. 30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி : +94 11 247 7101 மற்றும் +94 11 2 477 000
தொலைநகல் : +94 11 247 7710
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 
 
 
 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு கலைஞர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து நாயகனாக படங்கள் நடிக்கும் அவர் சிறப்பு வேடங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கிறார்.

அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விருது கிடைத்ததற்காக படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் சேதுபதி மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd