நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு கலைஞர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து நாயகனாக படங்கள் நடிக்கும் அவர் சிறப்பு வேடங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கிறார்.
அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விருது கிடைத்ததற்காக படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் சேதுபதி மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.