உள்நாட்டு தொடர்களில் தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணி கேப்டன் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவரது தனிப்பட்ட அந்தரங்க விடியோக்கள், புகைப்படங்கள், குரல்பதிவுகள் போன்றவை ஆன்லைனில் லீக்கான நிலையில், இணையவாசிகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவரின் காதலியுடன் பாபர் அசாம் நெருக்கமாக இருக்கும் விடியோ வெளியாகி, அந்நாட்டில் விவாதபொருளாக மாறியுள்ளது.
இந்த விடியோவை கண்ட பாபர் அசாம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்துகளை பகிர்வதோடு, பாபர் அசாமை குறிவைத்து அவரை இழிவுபடுத்தும் விதமாக இந்த விடியோக்கள் கசியவிடப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற தோல்வியால், அவரை முதலில் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு ஷான் மஸுத்தை கேப்டனாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிகவும் கொண்டாடப்பட்ட வீரராக இருந்து வந்த பாபர் அசாம், தற்போது கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக வெளியாகும் தகவல்கள், பாலியல் விடியோ தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.