ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது,
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா நாணயசுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.
151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.
கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.