இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டம் நேற்று (19) விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸின் முதல் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 78 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி நான்காம் நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
முன்னணி ஆட்டக்காரர்களான லபுசாக்னே (13), ஸ்டீவன் ஸ்மித் (6) சொற்ப ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடு அதிர்ச்சியளித்தனர்.
இறுதியில் (18) ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் குவித்தது.
ஐந்தாவது மற்றும் இறுதி நாளான (19) அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற 174 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே சமயம் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது, இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 92.3 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.