இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், சிட்சிபாஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ரோம் நகரில் நடந்து வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பின் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வருடத்தில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.