web log free
May 18, 2026

நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’


இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டனர்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர்.

நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார்.

நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்தார்.

1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை வெற்றிப்பெறவது இதுவே முதல் முறையாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd