இலங்கை - ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.
மழை குறுக்கிட்டதால் போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் ஸ்கொட்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஸ்கொட்லாந்து 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.