இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் குசல் பெரேரா 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 16.01 ஓவர்களில் ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.