பிரேசிலின் பிரபல கால்பந்து விளையாட்டாளர் நேய்மார் (Neymar) பாரிஸில், பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் நேய்மார்குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சாவ் பாலோ காவல்துறையின் அறிக்கையைச் சுட்டி, பல்வேறு ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.
27 வயது நேய்மார் ஹோட்டல் ஒன்றில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
நேய்மார் தரப்பு அதன் தொடர்பில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.