உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று வியாழக்கிழமை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும், உலகக்கிண்ண போட்டிகளில் பல முறை சந்தித்துள்ளன. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இன்றைய தினம் களமிறங்கவுள்ளன.
இதனால், இன்றைய போட்டியில் அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.