web log free
December 27, 2024

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் கருணாரத்ன, குசல் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரத்னே 32 ஓட்டங்களும் பெரேரா 64 ஓட்டங்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

அடுத்து வந்த அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ஓட்டங்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ஓட்டங்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ஓட்டங்களும் மேத்யூஸ் 26 ஓட்டங்களும் சேர்த்தனர்.

பின்னர் 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கிறது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சுனில் அம்பரீஷ்சும் ஆடினர். அம்பரீஷ் 5 ஓட்டங்களிலும் கெயில் 35 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd