இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
26 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற உள்ளதுடன், இந்த போட்டியின் பின்னர் தான் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.