இம்முறை நடத்தப்படவிருக்கும் கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் களமிறங்கவிருக்கும் இரண்டு தரப்பினருக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், இந்த பேச்சுவார்த்தை இன்றுமாலை இடம்பெறும்.
அடுத்தமாதம் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த தேர்தலை விளையாட்டுத்துறை அமைச்சு அடுத்தமாதம் 21 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.