இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நீண்டகாலமாக விலகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 87 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 152 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 39 சர்வதேச டி20 போட்டிகளில் பங்குபற்றி 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.