நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை நியூஸிலந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 30 ஓட்டத்தையும், குசல் பெரேரா 2 ஓட்டத்தையும், அவிஷ்க பெர்னாண்டோ 6 ஓட்டத்தையும், நிரோஷன் திக்வெல்ல 24 ஓட்டத்தையும், மதுஷங்க 20 ஓட்டத்தையும், தசூன் சானக்க 7 ஓட்டத்தையும், இசுறு உதான 2 ஓட்டத்தையும், அகில தனஞ்சய டக்கவுட்டுடனும் பெற்று ஆட்டமிழந்ததுடன், மலிங்க 6 ஓட்டத்துடனும், வணிந்து அஷரங்க 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மிட்செல் சாண்டனர் மற்றும் டோட் அஸ்டில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஸ்கோட் கேகில்ஜன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆவது 20 : 20 போட்டியில் 125 ஓட்டங்களை குவித்த இலங்கை - தனுஷ்க குணதிலக்க 30 (25)