நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் மலிங்கா தனது 3-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து நியூசிலாந்து அணியை மிரள வைத்தார்.
தற்போது நியூசிலாந்து அணி 7.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியின் மலிங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.