பாகிஸ்தான் நாட்டில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் பிரபலமாக விராட் கோலி உள்ளார் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி போன்ற சிறந்த வீரர் கிடைப்பது அரிதான விஷயம். டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் நம்பர் 1 வீரராக இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவர் அணியையும் சிறப்பாக வழிநடுத்துகிறார்.
ஒரு அணி வெற்றி பெற அணியில் உள்ள வீரர்கள் சிறந்த திறமைசாலிகளாக இருந்தால் போதாது. ஒவ்வொரு வீரரின் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கமும், எண்ணமும் இருக்க வேண்டும். அதை கட்சிதமாக செயல்படுத்தி வருகின்றார் விராட் கோலி.
விராட் கோலியின் அந்த மனநிலை, அணியின் சரியான நுட்பத்தை தாண்டி, வீரர்களின் மனநிலையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என அக்ரம் தெரிவித்துள்ளார்.