இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
பிரிஸ்பனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
118 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி முதல் ஓவரிலே ஒரு விக்கெட்டை இழந்தாலும், டேவிட் வோர்னர் மற்றும் ஸ்மித்தின் வலுவான ஆட்டத்தினால் 13 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.
டேவிட் வோர்னர் 60 ஓட்டத்துடனும், ஸ்டீவ் ஸ்மித் 53 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.