ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது.
முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 187 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக ஜாவேத் அஹ்மாடி 39 ரன்கள் எடுத்தார்.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கியமேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 277 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் புரூக்ஸ் 111 ரன்கள் விளாசினார்.
தொடக்க ஆட்டக்காரர் கேம்ப்பெல் 55 ரன்னும், விக்கெட் கீப்பர் டாவ்ரிச் 42 ரன்னும் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் அமிர் ஹம்சா 5 விக்கெட்டுகளும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளும் ஜாகிர் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாவித் அகமதி (62 ரன்) அரைசதம் அடித்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இவங்க போட்டில மட்டும் மழை வராதா? பிளான் பண்ண மாதிரி இருக்கு .. பொங்கிய ரசிகர்கள்!
3ஆவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆப்கான் வீரர்கள் எளிதாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணி, 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் சேஸ், கர்ன்வால், ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 31 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து, 33 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஓஷ்னே தாமஸ்