web log free
December 26, 2024

6 வீரர்களுக்கு டெங்கு ; இலங்கைக்கு திரும்புவதில் சிக்கல்

13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்காக நேபாளம் வந்த ஆறு விளையாட்டு வீரர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் ஆறுபேரும் நேபாளம் காத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 

அதில் ஓருவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

நோபளத்தின் மற்றொரு பெரிய நகரமான பொக்காரவில் இருந்த இலங்கை வீரர்கள் இருவருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட அவர்கள் விமானம் மூலம் காத்மண்டு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். த

தனியார்  வைத்தியசாலை என்பதால் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கான சிகிச்சை செலவுஏற்பட்டுள்ளதாகவும் அனைத்து செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சே பொருப்பேற்றுள்ளது.

இவர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது நோய்வாய்பட்டு இருப்பவர்களை 4 மணித்தியாலயத்திற்கும் மேலான விமானப் பயணத்தில் அழைத்துவருவது சிக்கலுக்குரிய விடயம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd